பெற்றோல் விநியோகம் தொடர்பில் LIOC யின் அறிவிப்பு

0
176

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் LIOC நிறுவனம் பெற்றோல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, CEYPETCO நிறுவனம் இன்று புதன்கிழமை முதல் அழுலுக்கு வரும் வகையில்,  அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் நிலையில், இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) மாத்திரம் தற்போது பொதுமக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வருவதன் காரணமாகவும், அதிகரித்த பெற்றோல் பயன்பாட்டு வாகனங்கள் காரணமாகவும் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

– மோட்டார் சைக்கிள்: ரூ. 1,500
– முச்சக்கரவண்டி: ரூ. 2,500
– கார்: ரூ. 7,000

எனும் வகையில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக, LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here