தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தேர்வுகள் உட்பட அனைத்து கல்வித் திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும், மேலும் அனைத்து விடுதிகளும் உடனடியாக மூடப்படும். எனவே, அனைத்து மாணவர்களும் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் துணைவேந்தர் கூறியுள்ளார்.

கல்விச் செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகள் ஆரம்பமானது குறித்து உரிய காலத்தில் குறித்த பீடங்களுக்கு அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.