பேஸ்புக் உறவினால் 15 பவுன் நகையை பறிகொடுத்த இளைஞன்

0
244

நபரொருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை பெண்னொருவர் திருடிச் சென்றுள்ளார். குறித்த நபர் இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகியுள்ளனர். நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, மதுபானத்தை அருந்தக்கொடுத்து 15 பவுன் நிறையுடைய 27,50,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அந்நபர் சென்ற காரையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், அதனை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு அந்த பெண் தப்பிச்சென்றுள்ளாரெனவும் கொழும்பைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கொரியாவிற்கு தொழிலுக்கு சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பிய ஒருவரிடமே தங்க நகைகள் திருடபபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here