பொகவந்தலாவை மாணவர்களின் அரங்கேற்றம் கொழும்பில் நாளை

0
736

அபிநயக்ஷேத்திரா இயக்குனர் கலாசூரி திவ்யா சுஜேனின் மாணவர்களும் பொகவந்தலாவைச் சேர்ந்தவர்களுமான சொக்கர் பிரவீன் , நிவேதிதா கணேசன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை 25 ஆம் திகதி கொழும்பு -06, வெள்ளவத்தையில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐம்பெருங் காப்பியங்களாக போற்றப்படும் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.

அபிநயக்ஷேத்திராவின் பயணத்தில் பெறும் அகவெளி அனுபவமும், ஆய்வும், ஆனந்தமும் அதிகரித்துக் கொண்டே செல்வதை அவதானித்தவளாய், மரபு மாறாத மற்றுமொரு புதிய மார்க்கத்தை செதுக்கிடும் அகத்தூண்டலில் உருப்பெற்றதே ‘ நிறை ஓதம் நீர் நின்று ‘ – ஐம்பெருங் காப்பிய மார்க்கம்.

முதன்மை விருந்தினராக் ராஜ்குமார் பாரதி ஐயா கலந்து சிறப்பிக்கவிருக்கும இந்நிகழ்வுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here