பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என  குற்றசாட்டில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

28 வயதான மேற்படி இளைஞன் காலி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் தென் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.