அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த பொது மலசலக்கூடம் கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதிகளுக்கு வரும் பயணிகள் உட்பட பொதுமக்கள் பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வீடியோ

கடும்மழையினால் குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் கடந்த ஒரு வாரகாலமாக மேற்படி மலசலக்கூடம் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை அட்டன் நகர சபை கண்டுகொள்ளவில்லையென அங்கு வரும் பொதுமக்கள் , பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதிக்கு வரும் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் அட்டன் நகர சபை உரிய கவனம் செலுத்துமா?