பொம்மையை குழந்தையாக வைத்துக் கொண்டு யாசகத்தில் ஈடுபட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பொம்மை ஒன்றை குழந்தை போன்று சுற்றி வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் யாசகம் பெற்றுள்ளார்.

சோதனையிட்ட போது அந்த பெண் குழந்தை போன்று பொம்மையை வைத்துக் கொண்டு குறித்த செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு பால்மா பெற்றுக் கொடுப்பதற்கு வசதியில்லை என கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை துணியால் சுற்றியிருக்கும் முறையினை பார்த்தப்பின்னர் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுதலையானார்.