இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்  156 ஆவது  தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்த வகையில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் இரத்ததானம் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அட்டன் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜயசேன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை நாவலப்பிட்டி வைத்தியசாலை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.