பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 4000 அதிகாரிகள், நீண்டகாலமாக தரமான சுகாதார நிலை இன்றி உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தெரிவித்தார். பல உத்தியோகத்தர்கள் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

சுகாதார மட்டத்தில் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.