எட்டு வேலைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ம் திகதியிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த போக்குவரத்து அமைச்சு எதிர்பார்த்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்காக அமைச்சர் துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
குறுகிய காலத்தில் பொதுப் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது.

எரிபொருள் நெருக்கடி நிலவுவதனால் குறைந்தளவிலான எரிபொருளைப் பயன்படுத்தி அதிக பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டுமென்று அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.