போராட்டகாரர்கள் மீதான தாக்குதலுக்கு ஈரோஸ் கண்டனம்!  

0
492
104 நாட்களாக இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியமையானது அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்துவதாகவும் இலங்கை மீதான அனைத்துலத்தின் அபிப்பிராயத்தை சீர்குலைப்பதாகவும் இருக்கின்றது.
 இன்று அதிகாலை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டிப்பதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடுகையில் மக்களின் அடையாளமாக நடத்தப்படும் மேற்படி போராட்டம் நாட்டில் பல சாதகமன மாற்றங்களையும் நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்பட்டுத்தியிருந்த நிலையில்  இன்று சனாதிபதி செயலக வளாகத்திலிருந்து பி.ப.02.00 மணியளவில் வெளியேறுவதற்கான முடிவை நேற்று அறிவித்திருந்த நிலையிலும் அந்த இளைஞர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
  கடந்த சில மாதங்களாக இந்த நாடும் நாட்டுமக்களும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியால் வேதனைகளையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அடுத்தவேளை உணவுக்காக என்னசெய்வதென்று தவித்துக்கொண்டிருந்த வேளையிலும் நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டு இந் நெருக்கடியிலிருந்து விடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான தாக்குதல்சம்பவங்கள்
மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது.
ஆகவே புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த மாற்றத்திற்கு காரணமான இளைஞர்களோடும் சிவில் மற்றும் அரசியல் துறைசார்ந்த நிபுணர்களென அனைத்துத் தரப்புகளோடும் கலந்துரையாடி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லுவதற்கான பொருத்தமான குறுகியகாலச் செயற்றிட்டமொன்றை உருவாக்கிக்கொள்ளுவதோடு அரசியலமைப்பு சீர்திருத்தத்தோடு விரைவாக  பொதுத்தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்து மக்களுக்கான வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here