நுவரெலியா போனிவிஸ்ட்டா பகுதியில் போலி வாகன இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட முச்சக்கரவண்டி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போணிவிஸ்ட்டா பகுதியில் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது போலி இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றினை வைத்திருந்த 26 வயதுடைய ஒருவரை 27 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபரை, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  இன்று  புதன்கிழமை ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரும்
நுவரெலியா பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

செ.திவாகரன்