பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்கு புதுடில்லி வருமாறு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தான் புதுடில்லிக்கு அழைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவு ஒன்றில் இதனை அவர் தெரிவித்திருக்கின்றார்.

‘எனது நண்பரும் இலங்கைத் தலைவருமான மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்கு விஜயம் செய்து புதுடில்லியில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுமாறும், இந்து, பௌத்த கோவில்களுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன். ஜூன் மாதத்தில் மழைகாலம் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர் வருவார் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது ருவிட்டர் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.