லிட்ரோ நிறுவனம் கேஸ் விலைகளை மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையிலி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 6,850 மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 2,740 என அதிகரித்துள்ளது.

லாஃப்ஸ் கேஸ் விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.