மட்டு. மாவட்டத்தில் மாணவர்களின் போசாக்குதன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிடின் பாரிய விளைவு ஏற்படும். _மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணண் தெரிவித்தார்.

எனவே இதனை பாரிய தாக்கம் ஏற்பட முன் கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்கான கிராமிய பொருளாதார புத்துயிர் ஊட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகை துறைசார் ஒருங்கிணேந்த பொறிமுறை தொடர்பான மட்டு மாவட்ட மட்ட முதலாவது கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது மாவட்ட,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. சுகுணண் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

எமது திணைக்களத்தால் மாவட்ட ரீதியில் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களின் போசாக்கு சம்மந்தமான பரிசோதனை மேற்கொண்ட போது 50% மேற்பட்ட மாணவர்கள் போசாக்கற்ற நிலையில் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர். இது ஒரு ஆபத்தான நிலை. இதற்குரிய தீர்வு விரைவில் காணப்படாவிட்டால் இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொற்றா நோய்க்கு ஆளாகின்றனர்.

மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களின்,வறுமைநிலையை போக்கி போசாக்கு தன்மையை உறுதிப்படுத்துவதற்கான பல செயற்றிட்டம் பிரதேச மட்ட குழுக்களை அமைப்பதன் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்துடன் சமூர்த்தி திட்டம் ஊடாக சிறு தொழில் முயர்ச்சியிளர்குரிய கடன்உதவி வழங்க பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஶ்ரீகாந்த் , மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ் புண்ணியமூர்த்தி பிரதேச செயலாளர்கள் மற்றும்,மாவட்ட விவசாய நீர்ப்பாசன கடற்றொழில் கமநல திணைக்கள உயர்,அதிகாரிகள் இராணுவ உயர்அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கல்வி தீணைக்கள உயர் அதிகாரிகள் கலந்தூகொண்டனர்.