15 வயது சிறுமியும் அவரது காதலனுமான 19 வயது மணமகன் ஆகியோர் திருமண ஆடைகளை அணிவதற்கு தயாராகவிருந்த நிலையில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த திருமண வைபவத்தில் சிறுமியினதும் இளைஞனதும் உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

15 வயதுடைய சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.