வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்த  நிலையில்  காணாமல் போயிருந்த   மூவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இதில், தாய் மற்றும் அவரது மகனுடைய சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றுமொரு மகன் உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி