டி  சந்ரு , எம்.கிருஸ்ணா

தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய அடை மழையினால் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் பகுதியிலே இன்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அட்டன் நுவரெலியா அட்டன் தலவாக்கலை நுவரெலியா அம்பேவல் பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீதியில் பணிமூட்டம் நிறைந்து காணப்படுவதனால் வாகனசாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.