கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

‘பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறு ‘ எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கடமையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் உள்ள கடமை தொடர்பான கடிதம் அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை சோதனை செய்து எரிபொருளை விநியோகிக்க முடியும்.

பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவது பரீட்சைத் திணைக்களத்தின் எதிர்பார்ப்பு என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.