மத்திய மாகணத்தில் பயிற்சி பெற்ற 31 உதவி ஆசியர்கள் புறக்கணிப்பு

0
396

இரண்டு வருடகால கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தும் இதுவரையிலும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சப்ரகமுவ ஊவா மாகாணங்களில் உள்ள உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மத்திய மாகாணத்தில் உள்ள 31 உதவி ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை என உதவி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உதவி ஆசிரியர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்ற நிலையில் தற்பொழுது நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்க்கை செலவினை கொண்டு செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

கலாசாலை கல்வியை ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தாம் போராடி கொண்டிருந்தாலும் இதுவரையிலும் எமக்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. எமது நியமனத்தில் மத்திய மாகாணத்தில் மாத்திரம் இழுபறி நிலை கானப்பட்டு வருகிறது.

வலைய கல்வி பணிமனை மாகாண கல்வி அமைச்சி வரை சென்று பலமுறை எமது முறைபாட்டினை பதிவு செய்த போதும் இதுவரையிலும் மலையக அரசியலில் வாதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ்ஷின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் மத்திய மாகாணத்தில் உள்ள 31 உதவி ஆசியர்கள் தமது நியமனம் தொடர்பில் தீர்வினை பெற்று தருமாறு கோரி கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு கடிதம் ஒன்றையும் அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் தலைவர் இராஜரட்ணம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

S. சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here