மன்னார் மடு திருத்தலத்தின் கொடியேற்றம்

0
189

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழா எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான கொடியேற்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

 இவ்விழாவிற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இது இடம்பெற்றது.

கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தரவில்லை. இம்முறை ஆடி திருவிழாவிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இம்முறை மடுதிருத்தல பகுதிகளில் அதிக எண்ணிக்கையான உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதேச சபையின் அறிக்கையின் படி இம்முறை வியாபார நிலையங்களுக்கு வரி அறவிடப்படாது விட்டாலும், ஆவணி திருவிழாவிற்கு அமைக்கப்படும் கடைகளுக்கு வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உணவகம் மற்றும் ஏனைய வியாபார நிலையங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here