மன்னார் மறை மாவட்டத்தில்  திருவிவிலிய அறிவுப் போட்டிகள்

0
333

வருடந்தோறும் தேசிய ரீதியில் நடைபெறும் திருவிவிலிய அறிவுப் போட்டிகள் இவ் நடப்பு வருடத்திலும் (2022) நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டங்களாக மன்னார் மறைமாவட்டத்தில் தற்பொழுது பங்கு ரீதியாக இவ் போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கும் இவ்வேளையில் இதையடுத்து மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கோட்ட ரீதியில் இவ் போட்டிகள் இடம்பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தில் நான்கு மறைகோட்டங்களில் நடைபெற இருக்கும் இவ் போட்டிகள் ஏற்கனவே தெரிவித்திருப்பதற்கு அமைவாக மன்னார் மறைக்கோட்ட மட்டத் திருவிவிலிய அறிவுப் போட்டிகள் அனைத்தும் 25.06.2022 சனிக்கிழமை நடைபெறும் எனவும்

திருவிவிலிய எழுத்துப் பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் பேச்சுப் போட்டிகள் அன்று மதியம் ஒரு மணிக்கும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையம் அறிவித்திருப்பதாவது நான்கு மறைக்கோட்டங்களிலும் நடைபெற இருக்கும் பரீட்சை மற்றும் போட்டிகள் பரீட்சை நிலையங்களாக வவுனியா மறைக்கோட்டத்தில் அருட்பணி.அ.ஆரோக்கியம் அடிகளார் பொறுப்பில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையிலும்

முருங்கன் மறைக்கோட்டத்தில் அருட்பணி.அ.யூட் குரூஸ் அடிகளார் பொறுப்பில் மன். முருங்கன் தேசிய பாடசாலையிலும்  மடு; மறைக்கோட்டத்தில் அருட்பணி.எஸ்.லக்கோன்ஸ் பிகிறாடோ அடிகளார் பொறுப்பில் ஆட்காட்டிவெளி றோ.க.த.க.வித்தியாலயத்திலும்

மன்னார் மறைக்கோட்டத்தில் மறைக்கல்வி நிலையப் பொறுப்பில் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here