மன்னார் மறைமாவட்டத்துக்கு நான்கு புதிய குருக்கள்

0
300
மன்னார் மறைமாவட்டத்தில் வியாழக்கிழமை (16.06.2022) காலை 9.30 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நான்கு அருட்சகோதரர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால்  பணிக்குருத்துவ நிலைக்கு அருட்பொழிவு செய்யப்படவுள்ளார்கள்.
இவர்கள் நான்கு பேரும் மன்னார் மறைமாவட்டத்தைச் சார்ந்த மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சார்ந்தவர்கள்.
அருட்சகோதரன் செ.டிசாந்தன் பாலைக்குழி புனித காணிக்கை மாதா ஆலய பங்கைச் சார்ந்தவர்
அருட்சகோதரன் வெ.பியோ தர்சன் வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சார்ந்தவர்.
அருட்சகோதரன் கீ.ஜொனார்த்தன் கூஞ்ஞ தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலய பங்கைச் சேர்ந்தவர்.
அருட்சகோதரன் யோ.சாள்ஸ் கிளின்ரன் செட்டிக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கைச் சேர்ந்தவர்.
இவ் நான்கு அருட்சகோதரர்களும் குருத்துவ திருநிலைக்கு உயர்த்தப்பட்டதும் இவர்கள் அவரவர் பங்குகளில் சனிக்கிழமை (18.06.2022) காலை தங்கள் முதல் நன்றித் திருப்பலியை ஒப்புக்கொடுப்பர்.
அருட்பணியாளர்கள் செ.டிசாந்தன் அடிகளார் மற்றும் கீ.ஜொனார்த்தன் கூஞ்ஞ அடிகளார் ஆகியோர் இருவரும் காலை 9 மணிக்கும் அருட்பணியாளர்கள் வெ.பியோ தர்சன் அடிகளார் மற்றும் யோ.சாள்ஸ் கிளின்ரன் ஆகிய இருவரும் காலை 9.30 மணிக்கும் தங்கள் பங்குகளில் முதல் திருப்பலியை ஒப்பக்கொடுப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here