மரண வீட்டுக்கு சென்று திரும்பிய 11 பேர் வைத்தியசாலையில் – நுவரெலியாவில் சம்பவம்

0
343

பூண்டுலோயா விலிருந்து ஹைபொரஸ்ட்டுக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் பயணித்த லொறியொன்று அங்கிருந்து திரும்பி வரும் போது விபத்துக்குள்ளாகியதில் வேனில் சென்ற அனைவரும் கடுங்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்திரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் இந்த கெப் ரக லொரி பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளதுடுன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here