மரத்தில் இருந்து வழுக்கி விழுந்து மாணவன் பலி

0
317

மரத்தில் இருந்து வீழ்ந்து மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா – பரவுன்லோ வனப்பகுதிக்குச் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரனுடன் விரகு சேகரிக்கச் சென்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

பிரவுன்லோ தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட சம்பவத்தில் மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஈதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here