மறைந்தார் பிரபல பிண்ணனி பாடகர் பம்பா

0
222

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா   (Bamba Bakya) இன்று தனது 49 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. எனும் பாக்யராஜா,

அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தில் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தில் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலமாகியது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடல், பம்பா பாக்யா குரலில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here