மலைப்பாம்பின் வயிற்றுக்குள் பெண்ணின் சடலம்

0
525

இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பு ஒன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்பாம்பிற்குள் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா எனும் இப்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோது  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு பல குழுக்கள் அனுப்பப்பட்டன.

மறுநாள், வயிறு உப்பிய நிலையில் மலைப்பாம்பு ஒன்றை கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அப்பாம்மை கொலை செய்து அதன் உடலை வெட்டி பார்த்தபோது அப்பெண்ணின் 

உடல் அப்பாம்புக்குள் இருந்தது என பொலிஸ் அதிகாரி எஸ். ஹரீபா தெரிவித்தார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண் பயன்படுத்திய ஆடைகள், கருவிகளை அவரின் கணவர் கண்டதையடுத்து அவரை தேடுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேற்படி பாம்பு 5 மீற்றர் (16 அடி) நீளமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here