மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இளையோருக்கான தொழில்சார் வழிகாட்டல் கருத்தரங்கு

0
637

மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தினால் ஏற்பாட்டில், இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் நடத்தப்பட்ட இளையோருக்கான தொழில்துறை சார் மற்றும் NVQ  சான்றிதழ் பெறும் முறைகள் அச்சான்றிதழின் அவசியம் என்பன பற்றிய தெளிவுப்படுத்தல் கருத்தரங்கு ஹட்டன் ஹைலண்ட்ஸ கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் குறித்த கல்லூரியின் பிரதி அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கைத் தொழில்பயிற்சி அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் (பரீட்சைகள் மதிப்பீடு) சோகி உஸ்மான் அவர்கள் மேற்குறித்த விடயங்கள் பற்றிய தெளிவுப்படுத்தலுடன் வழிகாட்டளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

வேர்லட்விசன் முழுமையான அனுசரனை வழங்கிய இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றிருந்தனர்.

தகவல் -மலையக மறுமலர்ச்சி ஒன்றியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here