திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இன்று உயிரிழந்த 61 வயதுடைய  மூன்று குழந்தைகளின் தாயான இராமசாமி காளியம்மா என்பவரின் இறுதி கிரியைகளுக்கு நுவரெலியா மாவட்ட  இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால்   ஒரு தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் , இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உ தவி பணிப்பாளர் ரஞ்சித் அழக்கோன்,   ஆகியோர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் குடும்பத்தாரிடம்  25 ஆயிரம் ரூபா நிதியினை  வழங்கியுள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 இலட்சம் ரூபா வழங்கப்படும். இந்நிலையில் முதற்கட்டமாக உயிரிழந்த தாயின் இறுதி கிரியைகளுக்காக. 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கி பின்னர் மிகுதி தொகை கையளிக்கப்படும் எனவும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீட்டிற்கும் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும்  ரஞ்சித் அழகக்கோன்  தெரிவித்துள்ளார்.

 எம்.கிருஸ்ணா