எரிபொருள் தட்டுப்பாட்டினால் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர்

எரிபொருள் தட்டுபாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் நாளாந்தம் குவிந்துள்ளமை குறியிடத்தக்கது.