மாணவனின் கண்தானத்தால் இரு இளைஞர்களுக்கு மீண்டும் பார்வை

0
118

கடந்த மே மாதம் 31ஆம் திகதி விபத்தில் உயிரிழந்த கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவனின் கண்தானத்தால் இரு இளைஞர்கள் மீண்டும் பார்வை பெற்றுள்ளனர்.

கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த மாணவன் தக்ஷித இமேஷ் தனபால கடந்த மே மாதம் 31 ஆம் திகதி விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இவரது கண்தானத்தால் இரு இளைஞர்கள் மீண்டும் பார்வை பெற்றுள்ளனர். அநுராதபுரம் கிளையின் கண்தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன இது குறித்து கூறுகையில்:

‘உயிரிழந்த மாணவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்துஇ உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டோம். மாணவனின் இறுதிச் சடங்கிற்கு முன்பே இரண்டு இளைஞர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருவரும் பார்வை பெற்றனர்.

மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இவ்வாறு பார்வையை மீண்டும் பெற காத்திருக்கின்றனர். கண்களை தானம் செய்வது ஒரு உன்னதமான செயல்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here