மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார். இந்நிலையில் குறித்த விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.