பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபா எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும பாராளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது.

எவ்வாறாயினும், அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.