திடீர் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவிததுள்ளது. எரிபொருள் நெருக்கடியினால், பராமரிப்பு பிரிவிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால், முன்னுரிமை அடிப்படையில் வாகனங்களை பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டடுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைத்துக்கொள்வதற்காக, ஒத்துழைப்புடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.