மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும் நேரம் இன்று வியாழக்கிழமை முதல் குறைக்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும்  இரண்டு மணித்தியாலய ங்களுக்கு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 4 ஆம் திகதி மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் காலம் ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.