மிஸ் இந்தியா 2022 அழகுராணியாக சீனி ஷெட்டி

0
259

மிஸ் இந்தியா 2022 அழகுராணியாக கர்நாடகாவைச் சேர்ந்த சீனி ஷெட்டி தெரிவாகியுள்ளார். மிஸ் இந்தியா 2022 அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்று நேற்று இரவு நடைபெற்றது.

இப்போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த சீனி ஷெட்டி முதலிடம் பெற்று மிஸ் இந்தியா 2022 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

எதிர்வரும் உலக அழகுராணி போட்டியில் இந்தியாவின் சார்பில் அவர் பங்குபற்றவுள்ளார். 21 வயதான சீனி ஷெட்டி, நிதித்துறையில் பட்டம் பெற்றவர்.

ஜஸ்தானைச் சேர்ந்த ருபால் ஷெகாவத் இரண்டாமிடத்தையும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாத்தா சௌஹான் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here