மீண்டும் இன்று விநியோகம்

0
355

50,000 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விநியோகத்தில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் அடங்கும். கடந்த 24 ஆம் திகதி கேஸ் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டப்பின்னர், இன்று மீண்டும் விநியோக ஆரம்பிக்கப்படவுள்ளது.

3500 மெற்றிக் தொன்; எரிவாயு அடங்கிய கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் வகையில் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here