மீண்டும் களம் இறங்க தயாராகும் பசில்!

0
243

இரட்டைக் குடியுரிமையை துறந்து மீண்டும் களம் இறங்க தயாராகும் பசில்!

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச, தற்போதுள்ள இரட்டைக் குடியுரிமையை துறக்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிங்கள வார ஏடு ஒன்று வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் பசில் ராஜபக்ச தனது தீர்மானத்தை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்ததாக கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் எமது வார ஏட்டுக்கு தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விதிகளை உள்ளடக்கிய அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பதற்கான தீர்மானத்தை அடுத்து பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் ஆசனத்தில் இருந்து பதவி விலகினார். ஏனெனில் அவர் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்.

எவ்வாறாயினும், தனது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களுடன் நீண்ட கலந்துரையாடலின் பின்னர், பசில் ராஜபக்ச தனது இரட்டைக் குடியுரிமையைத் துறந்து சிறிலங்காவில் தொடர்ந்து அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் மூத்த பேச்சாளர் எமது வார ஏட்டுக்கு தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here