இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை அடுத்த வாரம் முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஜூன், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகைகளுக்கு தேவையான பணத்தை வழங்க திறைசேரி சம்மதம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நிலுவைத் தொகையை செலுத்திய பின்னர், வழமை போன்று மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.