முகத்துவாரம் துப்பாக்கிச சூட்டில் இளைஞன் பலி- நடந்தது என்ன?

0
245

கொழும்பு -15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக, முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயரிழந்தார்.

கொழும்பு-15, அளுத்மாவத்தையை வசிப்பிடமாகக் 24 வயது இளைஞனே துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அல்லது வேறு வர்த்தகத்தால் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால், இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணமடைந்த நபர், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நபர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here