நாட்டிலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும்  முச்சக்கர வண்டிகளுக்கான   எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து மாத்திரம் எரிபொருளை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

மீற்றர் மற்றும் விலைக் கட்டணங்களை வெளிப்படுத்தும் வாடகை சேவை முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் எரிபொருளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.