முதியவர்களின் நன்மை கருதி அக்கரபத்தனை சமுர்த்தி வங்கியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
320

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் அக்கரபத்தனை,டயகம பிரதேச மக்களின் நலன் கருதி அக்கரபத்தனை நகரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சமுர்த்தி வங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் அந்த வங்கியில் எந்த நடவடிக்கைகளுமின்றி மூடப்பட்டே இருக்கிறது.

தற்போது முதியவர்களுக்கான உதவி கொடுப்பணவுகளை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. இவ்வளவு காலம் அருகில் உள்ள
தபால் அலுவலகங்களில் தமக்கான உதவி தொகையை பெற்று வந்த முதியவர்கள் இனி சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றுக்கொள்ள உள்ளனர். இந்த உதவி தொகை 70 வயதுக்கும் மேலான முதியவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள் சமுர்த்தி நலன்புரி திட்டங்களை 25_30 km க்கு தூரத்தில் உள்ள லிந்துலை_சமூர்த்தி வங்கிக்கு சென்றே பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கான இந்தக் கொடுப்பணவை இவ்வளவு காலம் தாம் வசிக்கும் பிரதேசத்தில்உள்ள தபால் நிலையங்களில் பெற்று வந்த அக்கரபத்தனை,டயகம பிரதேசங்களில் உள்ள முதியவர்கள் இனி 30km அப்பால் சென்று பெற வேண்டிய நிலை வரும்.
பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் பலவீனமான நிலையிலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அக்கரபத்தனையில உள்ள சமுர்த்தி வங்கி காரியலயத்தை திறக்க வேண்டும் அல்லது அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக நேரடியாக முதியோர் கொடுப்பணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

அரச சேவைகளை எமது மக்கள் விரைவாக பெற்றுக்கொள்ள முடியாமைக்கு நிர்வாக கட்டமைப்பின் குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கிறது உதாரணமாக, ஹங்குராங்கத்தை பிரதேச செயலக பிரிவில் 94,916 மக்களுக்கு 10 சமுர்த்தி வங்கிகள் உள்ள அதே நேரம் நுவரெலிய பிரதேச செயலக பிரிவில் 227,400 மக்களுக்கு 5 சமுர்த்தி வங்கிகளே காணப்படுகிறது.அதிலும் லிந்துலை_சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட பகுதியில் 78ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை காணப்படுகிறது.

ஆகவே அக்கரபத்தனையில உள்ள சமுர்த்தி வங்கி இயங்க நடவடிக்கை எடுப்பது பிரதேச மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here