ஹப்புத்தளை ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தின் ஆபரணங்கள் மற்றும் உண்டியல்களில் இருந்த பணம் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் பொலிஸார் ஆலய வளாகத்தில் தடயவில் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளி உதவியுடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.