100 வருடம் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மீது பாரிய ஆலமரம் முறிந்து விழுந்ததில் ஆலயத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுதாக தெரிய வருகிறது.

தெமோதரை சௌதம் தோட்டத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் மீதே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால், மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைகும் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

 

 

தெமோதரை நிருபர் – சுரேஷ்குமார்