ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.