முன்பள்ளி ஒன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள நொங்புவா லம்பு நகரில் இன்று வியாழக்கிழமை  பிற்பல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குறைந்தபட்சம் 23 சிறார்கள், 2 ஆசிரியர்கள், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரும் அடங்கியுள்ளனர் என பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலின் பின்னர், தாக்குதலாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும்  பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.