மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

0
25

3ஆவது முறையாகவும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி  இன்று ஞாயிற்றுக்கிழமை (09) பதவியேற்றுக் கொண்டார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும், விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் உட்பட 8,000இற்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here