பாண் ஒன்றுக்குள்ளிருந்து மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே , மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.