வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகளை நடத்தவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற் கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களிலும் பாடசாலைகள் வழமையான நேர அடிப்படையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள் ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் அல்லது இணையத்தில் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது