மேலதிக வகுப்பிற்கு நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – கணேசபுரம் 08ஆம் ஒழுங்கையில் குறித்த மாணவி அவரது வீட்டை அண்மித்து காணப்படும் கிணறொன்றிலிருந்து சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளார்.

வகுப்புக்குச் சென்ற 16 வயது மாணவி வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீதான பரிசோதனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.